Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டாவது நாள் அதிகரித்து கூர்கா, கொரில்லா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல், முழு விவரம்

கொரில்லா, கூர்கா கடந்த வாரம் திரைக்கு வந்த படங்கள். இந்த இரண்டு படங்களும் பல தரப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விமர்சனங்கள் தாண்டி காமெடி படங்களை விரும்புவோர்களுக்கு இப்படம் கவர்ந்துள்ளது, இந்நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் இந்த இரண்டு படங்கள் முதல் நாள் ரூ 14 லட்சம் வரை வசூல் செய்தது.

ஆனால், நேற்று இந்த இரண்டு படங்களின் வசூலும் தமிழகம் முழுவதுமே அதிகரித்துள்ளது.

நேற்று சென்னையில் மட்டும் இந்த இரண்டு படங்களும் ரூ 19 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், தமிழகத்தில் ரூ 2 கோடிகளை தாண்டி இப்படங்கள் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.