Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் பட பாடல்கள் குறித்து ஒரு சூப்பர் அப்டேட்- ரெடியா தளபதி ரசிகர்களே?

விஜய்-அட்லீ மூனறாவது முறையாக இணைந்து ரசிகர்களுக்கு கொடுக்கப்போகும் படம் பிகில். விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய் முதன்முதலாக ஒரு பயிற்சியாளராக நடிக்கிறார்.

அதுவே ரசிகர்களுக்கு ஸ்பெஷல், அதுமட்டுமில்லாமல் தளபதி இரண்டு வேடத்திலும் நடிக்கிறார். படத்திற்கான சின்ன சின்ன செய்திகள் வெளியாகி வந்தாலும் சமூக வலைதளங்களில் பட பாடல்கள் லீக் என்ற விஷயத்தை தடுக்க முடியவில்லை.

தற்போது என்ன விஷயம் என்றால் பிகில் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் என்றும் விரைவில் படத்தின் சிங்கிள் டிராக்கை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.