Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா?- நிஜம் தானா?

அஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ் சினிமாவிற்கு ஒரு முக்கியமான படம். பெண்களுக்கு எதிராக நாட்டில் நிறைய தவறான விஷயங்கள் நடந்துகொண்டே வருகிறது, அதற்கான தீர்வு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை.

இந்த நேரத்தில் அப்படி பெண்களுக்கு நடக்கும் கொடுமையை பற்றி பேசும் படமாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை தயாராகி இருக்கிறது. அதுவும் தல போன்ற ஒரு பெரிய நடிகர் இப்படிபட்ட படத்தில் நடிப்பது பெண்களே பெரிதகா கொண்டாடுகிறார்கள் என்று கூறலாம்.

ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமை மட்டும் ரூ.50 முதல் ரூ. 55 கோடி வரை விலைபோனதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.