Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமலா பாலின் ஆடை படம் வெளியானது இவரால் தானாம்! நிறுத்தப்பட்டு பின் ரிலீஸ் ஆன கதை

நடிகை அமலா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆடை படம் நேற்று மாலையில் தான் வெளியானது. காலையிலே தியேட்டர்களில் படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர்.

அதே போல பலரும் படத்திற்கு முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் படம் வெளியாகவில்லை என்ற செய்தி ரசிகர்களை கடுப்பாக்கியது. காலைக்காட்சியும், பத்திரிக்கையாளர் காட்சியும் ரத்து செய்யப்பட்டன.

தயாரிப்பாளருக்கு இருந்த பணப்பிரச்சனைகளால் தியேட்டர்களுக்கு கே டி எம் அனுப்பப்படவில்லை. இந்நிலையில் அமலா பால் இந்த பிரச்சனையில் தலையிட்டு படம் ரிலீஸ் பற்றி காலை முதல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் விவாதம் செய்துள்ளார்.

இறுதியாக அவர் தயாரிப்பாளருக்கு உதவும் விதமாக தன் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை விட்டுக்கொடுத்து விட்டாராம். இதனால் பின்னர் படம் வெளியாகிவிட்டது.