Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே நாளில் விஜய் போன்ற நடிகர்களால் மட்டுமே அப்படி ஒரு விஷயத்தை செய்ய முடியும்- பிகில் பட பிரபலம் ஓபன் டாக்

விஜய்யின் பிகில் படம் வரும் தீபாவளி ரிலீஸ். ஏஜிஎஸ் நிறுவனம் முதன்முதலாக விஜய்யை வைத்து படம் தயாரிப்பதால் அவர்களது குழுவே பெரிய உற்சாகத்தில் தான் பணிபுரிந்து வருகின்றனர்.

புரொமோஷனை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று அவர்கள் நிறைய பிளான் போடுகின்றனர். இந்த படத்தின் ஃபஸ்ட் லுக்கிற்காக விஜய்யை போட்டோ ஷுட் எடுத்தவர் வெங்கட் ராம்.

அவர் ஒரு பேட்டியில், ஃபஸ்ட் லுக் எல்லாமே அட்லீ மற்றும் அவர்களது டீம் யோசனைகள் தான். ஆனால் இதில் என்ன சவால் என்றால் அந்த 4 லுக்கையும் ஒரே நாளில் எடுப்பது தான், அது விஜய் என்பதால் தான் முடிந்தது.

அவரை போல ஒருவரால் தான் ஒரே நாளில் 4 லுக்கில் வர முடிந்தது, மிகவும் கூலாக வேலையை செய்தார் என்றார்.