Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடாரம் கொண்டான் படம் தடை செய்யப்பட்டதன் உண்மை பின்னணி இதுதான்! இந்த ஒரு காட்சிக்காகவா

விக்ரம் நடிப்பில் கமல்ஹாசன் தயாரித்துள்ள கடாரம் கொண்டான் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவந்தது.

இருந்தபோதிலும் படத்திற்கு வசூல் நல்ல முறையில் தான் இருந்து வந்தது. ஆனால் மலேசியாவில் இப்படத்தை வெளியிட அந்நாட்டு தணிக்கை தடை செய்துள்ளது.

படத்தில் மலேசிய காவல்துறையை மோசமாக காட்டியிருப்பதாகவும், காவலர்கள் குற்றவாளிகளுக்கு உதவுவது போலவும் இருப்பதே தடைக்கு காரணம் என சொல்லப்பட்டு வருகிறது.

மலேசியாவில் இப்படத்தை வெளியிடுவதாக இருந்த ஃபைவ் ஸ்டார் ஏவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கபாலி, பில்லா படங்களுக்கும் நாங்கள் உதவியுள்ளோம்.

சட்டவிரோதமாக காட்சிகளை படமாக்கவில்லை. எல்லா அனுமதிகளையும் பெற்ற பின்பே படப்பிடிப்பு தொடங்கினோம். காவல் நிலையத்தில் மலேசிய காவலர் ஒருவர் கொலைசெய்யப்படுகிறார். அதை இங்கு ஏற்கமாட்டார்கள். காவல்துறையை தவறாக சித்திப்பதை அரசு அனுமதிக்காது. வன்முறை, ஊழல் காட்சிகளுக்கும் அனுமதி மறுக்கப்படும்.

இதை இயக்குனரி எம்.செல்வாவிடம் கூறினேன். அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. வன்முறைகாட்சிகள் இங்கு படமாக்கப்படவில்லை. இந்தியாவில் செட் போட்டு மலேசியா காட்சிகளை படமாக்கியிருக்கலாம். மலேசிய நடிகை ஒருவர் இந்தியாவுக்கு சென்று நடித்துக்கொடுத்ததும் எங்களுக்கு தெரியாது என கூறியுள்ளனர்.