Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகைகளில் சமந்தா செய்த சாதனை- வாழ்த்தும் பிரபலங்கள்

நடிகைகள் இப்போதெல்லாம் புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நடிகர்களுடன் இணைந்து டூயட் பாடி, காதல் காட்சிகள் நடிப்பது என்பது இல்லாமல் தங்களது நடிப்பு திறமையை காட்ட கதைகள் தேர்வு செய்கின்றனர்.

அதற்கு உதாரணமாக அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா என நடிகைகளை கூறிக் கொண்டே போகலாம். இப்போது நடிகை சமந்தா தெலுங்கில் ஓ பேபி என்ற படம் நடித்திருந்தார். தற்போது இப்படம் அமெரிக்காவில் 1 மில்லியன் வசூலை எட்டியுள்ளது.

இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர், சமந்தா மட்டும் நடித்து 1 மில்லியன் படம் பெற்ற முதல் படம் இதுதானாம்.