தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமாவே தலையில் வைத்து கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த். இவர் பெரிய ஹீரோ, சிறிய ஹீரோ என்றே பாகுபாடே இல்லாமல் நன்றாக இருந்தால் பாராட்டிவிடுவார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து தல அஜித்தை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் அனைவரும் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர், அது மட்டுமின்றி பேட்ட, விஸ்வாசம் வந்தபோது ரசிகர்கள் செம்ம சண்டைப்போட்டனர்.
தற்போது இந்த செய்தி இருதரப்பு ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தி சண்டைக்கு முடிவுக்கட்டியுள்ளது.