அஜித் போன்ற நடிகர் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது சரியா?- பிரபல இயக்குனர்
சமூக அக்கறையோடு படங்கள் இயக்குபவர் சமுத்திரக்கனி. இவர் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார், அதில், அஜித் போன்ற மாஸ் ஹீரோ நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது சரியா என்று கேட்டுள்ளனர்.
அதற்கு சமுத்திரக்கனி, முதலில் அஜித் அவர்களுக்கு எனது ராயல் சல்யூட். ஒரு மாஸ் ஹீரோ தனக்கான காட்சி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறும் நிலையில் இப்படிபட்ட கதையில் அஜித் நடித்தது சூப்பர்.
என்னை போன்றவர்கள் வருடம் முழுவதும் சொல்வதை அஜித் அவர்கள் ஒரே ஷோவில் கூறிவிட்டார்.
அவர் போன்ற நபர்களிடம் இருந்து சமூகத்துக்கு தேவையான விஷயம் வரும்போது பெரிய அளவில் ரீச் ஆகும் என பேசியுள்ளார்.