Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை குறைந்த வசூல், ஆனாலும் லாபம் இந்த ஏரியாக்களில்

தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதே நேரத்தில் அஜித் இப்படியான ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்காக வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

இதை தொடர்ந்து இப்படம் வெளியிட்ட பல இடங்களில் வெற்றி என அறிவித்துவிட்டனர், இலங்கை, ப்ரான்ஸ், பெல்ஜியம், அமெரிக்கா போன்ற நாடுகளில் படம் ஹிட் என்று கூறிவிட்டனர்.

அதேபோல் கர்நாடகாவில் ரூ 3 கோடி, கேரளாவில் ரூ 1.5 கோடி முறையே இப்படம் வசூல் செய்துள்ளது.

மற்ற அஜித் படங்களை ஒப்பிடுகையில் இது குறைவு என்றாலும், நியாயமான விலைக்கு இப்படத்தை விற்றதாம் படம் லாபம் தந்துள்ளதாம்.