Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேசிய விருதில் அரசியலா? கொந்தளிக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் இந்த வருடம் தேசிய விருது மிகவும் ஏமாற்றம் தான். கொடுத்தே ஆகவேண்டும் என்ற பட்டியலில் தான் தமிழ் சினிமாவிற்கு விருது கிடைத்துள்ளது.

அதுவும் யாருக்குமே தெரியாத பாரம் என்ற படத்திற்கு கொடுத்துள்ளனர், ஏற்கனவே இயக்குனர் வசந்தபாலன், பேரன்பு படத்திற்காக ஏன் மம்முட்டிக்கு கொடுக்கவில்லை, யுவன் இசையில் என்ன குறை கண்டீர்கள் என கடுமையாக விமர்சித்தார்.

சமீபத்தில் இந்த வருடம் கண்டிப்பாக தேசிய விருது வாங்கும் என எதிர்ப்பார்த்த பரியேறும் பெருமாள் படத்திற்கு கிடைக்காதது பலருக்கும் அதிர்ச்சி தான்.

இதுக்குறித்து மாரி செல்வராஜ் பேசுகையில் ‘எனக்கு தேசிய விருது கிடைக்காததை எண்ணி, நான் வருத்தப்பட்டதை விட, ராம், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் தான் அதிகம் வருத்தப்படுகின்றனர், அதைப்பார்க்கும் போது தான் இன்னும் வருத்தம் வருகின்றது’ என கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி சிறந்த ஸ்பெஷல் எபேக்ட்ஸிற்கு 2.0 படத்திற்கு கொடுக்காதது பலருக்கும் ஏமாற்றம் தான், இப்படி நமக்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்த எந்த விருதும் கிடைக்காததை பலரும் இது ஒரு வகையான அரசியல் தான் என கூறி வருகின்றனர்.