Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, கமலை விமர்சித்து விஜய் கேள்விக்கு பதில் சொல்லாத எஸ்.ஏ.சி

விஜய் இன்று இந்தியாவே அறியும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார், அதில் நடிகர்களின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.

இதில் குறிப்பாக ‘ஒரு நடிகர் அரசியலுக்கு வருகின்றேன் என கூறிவிட்டு டிவி ப்ரோகிராம் நடத்துகின்றார்’ என கமலை விமர்சித்தார்.

மேலும், ‘பல வருடங்களுக்கு அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிக்கொண்டு மட்டும் தான் இருக்கின்றார்’ என ரஜினியை விமர்சித்தார்.

பின் விஜய்யின் படத்தில் அரசியல் உள்ளதே என்று கேட்டதற்கு உடனே ‘நான் இங்கு இயக்குனராக தான் வந்துள்ளேன், விஜய்யின் தந்தையாக இல்லை’ என கூறிவிட்டார்.