Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Big Breaking: அஜித்தை சந்தித்த வெங்கட்பிரபு, அந்த படம் வேண்டாம், ஆனால்? அஜித்தே கூறிய தகவல்

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் அஜித் அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளது அனைவரும் அறிந்ததே, இதை தொடர்ந்து அஜித் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

மேலும், வெங்கட்பிரபுவும் அஜித்தை நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் சென்று பார்த்தார்.

தற்போது நமக்கு கிடைத்த உண்மை தகவல்படி வெங்கட்பிரபு சில தினங்களுக்கு முன்பு அஜித்தை சந்தித்துள்ளார்.

அப்போது வெங்கட்பிரபு ஒரு அரசியல் கதையை சொல்ல, அதற்கு அஜித் ‘அரசியல் படம் வேண்டாம், வேறு கதை இருந்தால் சொல்லுங்கள், செய்யலாம்’ என அஜித் கூறியதாக செய்திகள் கிடைத்துள்ளது.