Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: ரஞ்சித்தின் அடுத்தப்படம் குறித்த சூப்பர் அப்டேட், முதன் முறையாக

ரஞ்சித் தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கியவர். இவர் படங்கள் வந்ததற்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் பலரும் விவாதங்களை தொடங்கினர்.

இதில் குறிப்பாக ஜாதி குறித்த விவாதங்கள் அதிகமாகியது, இந்நிலையில் ரஞ்சித் இயக்குனராக மட்டுமின்றி பரியேறும் பெருமாள் போன்ற தரமான படங்களை தயாரித்தும் உள்ளார்.

இவர் தயாரிப்பில் அடுத்து இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு படம் தயாராகி வருகின்றது, இப்படத்தில் ஹீரோவாக அட்டக்கத்தி தினேஷ் நடிக்கின்றார்.

இப்படத்தை ரஞ்சித்தின் உதவி இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கிவருகின்றார், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளதாம்.

இப்படத்திற்கு இசை தென்மா என்பவர், இவர் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார்.

மேலும், இப்படத்தின் செகண்ட் லுக் செப்டம்பர் 19 வர, டீசர் செப்டம்பர் 23 அல்லது 25ம் தேதி வரும் என கூறப்படுகின்றது.