Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதர்வா, அனுபமா ஜோடியாகும் நின்னுக்கோரி படத்தின் தமிழ் ரீமேக்! லேட்டஸ்ட் அப்டேட்

பிரேமம் படம் மூலமாக பலரின் மனங்களை ஈர்த்தவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் நடித்த கொடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் பெரிதளவில் அமையவில்லை.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் படங்களில் அதிகமாக நடித்து வந்தார். தெலுங்கில் நானி நடிப்பில் வந்த நின்னுக்கோரி படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

கண்ணன் இயக்கும் இப்படத்தில் அனுபமா, அதர்வாவுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவுள்ளதாம்.