Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் மங்காத்தா பட செய்தியை கொண்டாடும் ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

அஜித் சினிமாவில் தனக்கு என்று வழி அமைத்து அதில் பயணிப்பவர். எல்லா முன்னணி நடிகர்களும் தன்னுடைய 50வது படத்தை நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி காண வேண்டும் என்று நினைப்பர்.

ஆனால் அஜித் தைரியமாக தன்னுடைய 50வது படத்தில் வில்லனாக நடித்து அதில் வெற்றியும் கண்டார். அந்தப்படம் மங்காத்தா, இப்பட பெயர் சொன்னதுமே ரசிகர்கள் உற்சாகம் அடைந்துவிடுவார்கள்.

ஏனெனில் அந்த அளவிற்கு ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினார்கள், வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தின் 2ம் பாகம் குறித்து அவரிடம் கேட்டால், தல ஓகே சொன்னால் உடனே எடுத்து விடலாம் என்கிறார்.

இந்த நிலையில் இந்த வெற்றி படத்தின் டீஸர் வெளியான நாள் இது, ஒரு ரசிகர்கள் இந்த விஷயத்தை பகிர மற்ற தல ரசிகர்கள் அந்த டீஸரை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.