Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதற்கும் பிகில் படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை, பிரபல இயக்குனர் ஓபன் டாக்

பிகில் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ள படம். இப்படத்தில் விஜய் புட்பால் கோச்சாக நடித்துள்ளார்.

அதுவும் பெண்கள் அணியின் புட்பால் கோச்சாக விஜய் நடித்துள்ளார், தற்போது இந்த வாரம் வெளிவரவிருக்கும் கென்னடி க்ளப் படத்தில் பெண்கள் அணியின் கபடி டீம் கோச்சாக சசிகுமார் நடித்துள்ளார்.

இதனால், இந்த இரண்டு படங்களின் கதையும் ஒரே மாதிரி இருக்கும் என பலராலும் கூறப்பட்டு வந்தது.

ஆனால், சுசீந்திரன் ‘பிகிலுக்கும் இந்த படத்திற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை, இரண்டு படங்களின் எமோஷன் விளையாட்டு, அது மட்டுமே ஒற்றுமை’ என கூறியுள்ளார்.