Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

6 நாட்களில் இத்தனை கோடி வசூலா கோமாளி! ஜெயம் ரவி வேற லெவல்

கோமாளி ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

அஜித் படம் அதற்கு முந்தைய வாரம் ரிலிஸாகியும் கோமாளி படத்தின் வசூலுக்கு பாதிப்பு இல்லை, இந்நிலையில் கோமாளி உலகம் முழுவதும் 6 நாட்களில் ரூ 25 கோடி வசூலை கடந்துள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் வந்திருக்கும் என கூறப்படுகின்றது, மேலும், படமும் லாபத்தை எட்டிவிட்டதாம்.

ஜெயம் ரவி திரைப்பயணத்தில் மிகப்பெரும் ஓப்பனிங் கொடுத்தது, கிட்டத்தட்ட தனுஷ் படங்களுக்கு இணையான வசூல் வந்துள்ளதாம்.