Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா! செம்ம மாஸ்

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ள படம் பிகில். இப்படத்தில் நயன்தாரா, கதிர், இந்துஜா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பிகில் படத்தின் கதை இது தான் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது.

இதில் ‘விஜய் நார்த் மெட்ராஸில் மீன் விற்பவராக வருவாராம், அந்த ஏரியாவில் இருக்கும் புட்பால் டீம் லோக்கல் போட்டிகளில் கலக்க, அந்த டீமிற்குள் சில கார்ப்ரேட் கம்பெனிகள் வந்து நாசவேலைகளை செய்கிறார்களாம்.

அப்போது அப்பா விஜய் அதை தட்டிக்கேட்க, ஒரு கட்டத்தில் அவர் இறக்கும் நிலை வருகின்றதாம்.

அதனால், இனி புட்பாலே வேண்டாம் என மகன் விஜய் ஒதுங்க, இப்படியான பிரச்சனை அதே ஏரியாவில் மகளிர் புட்பால் அணிக்கு வர, பிறகு என்ன தளபதி எண்ட்ரீ, அடிதடி சரவெடி தானாம்.