Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல இது செம ஸ்பெஷல்

விஜய்யின் பிகில் தான் அடுத்து பிரம்மாண்டமாக வெளியாக போகும் ஒரு பெரிய படம். படத்திலும் விஜய்யை தாண்டி விளையாட்டு வீராங்கனைகளாக இருக்கும் பெண்கள் முக்கியமாக கதாபாத்திரங்கள்.

வரும் தீபாவளி ரிலீஸ் என்கின்றனர், ஆனால் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து செய்திகள் பல சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

அதில் ஒன்று படத்தின் ஆடியோ வெளியீடு பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாகவும், முதன்முறையாக அதற்காக ஆன் லைன் புக்கிங் இருக்கும் என்கின்றனர்.

இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.