Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: இந்தியன் 2-வில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம், முழுக்கதையுடன் இதோ

இந்தியன் கமல் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம். இப்படத்தின் அன்றைய வசூல் என்பது இன்றைய காலக்கட்டத்தில் ரூ 100 கோடிகளை தாண்டும்.

இந்நிலையில் தற்போது ஷங்கர் இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றார், இதில் கமல் மட்டுமின்றி சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், காஜல், ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதில் சித்தார்த் யு-டியுப் பிரபலமாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் நடிக்கின்றாராம், இந்தியாவில் நடக்கும் சில கொடுமைகளை யு-டியுப் மூலமாக சித்தார்த் காட்ட, வெளிநாட்டில் இருக்கும் இந்தியன் தாத்தா ரிட்டர்ன் ஆகி இதை தட்டிக்கேட்பதே படத்தின் கதையாம்.

மேலும், ப்ரியா பவானி ஷங்கர் இப்படத்தில் ஒரு பத்திரிகையாளராக நடிக்கின்றார் என்பது கூடுதல் தகவல்.