Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் வசூலுக்கு வரும் செக், போட்டிக்கு இந்த படங்களும் களம் இறங்குகிறதா?

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகின்றது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் பிகில் கண்டிப்பாக முதல் நாள் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அப்படி ஒரு சாதனை படைக்க கண்டிப்பாக பிகில் சோலோ ரிலிஸாக தான் இருக்க வேண்டும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

ஆனால், பிகிலுடன் தற்போது கார்த்தி நடித்துள்ள கைதி மற்றும் விஷாலின் ஆக்‌ஷன் படமும் திரைக்கு வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இந்த செய்தி உண்மை என்றால், கண்டிப்பாக பிகில் வசூல் கொஞ்சம் பாதிப்படையும்.