Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வரிசை கட்டி நிற்கும் தனுஷ் படங்கள்! செம்ம லைன் அப்

எனை நோக்கி பாயும் தோட்டா பல வருடங்களாக கிடப்பில் உள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.

இந்நிலையில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலிஸ் தேதி எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

தற்போதை அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர். இப்படம் செப்டம்பர் 6ம் தேதி வரவுள்ளதாம்.

அதை தொடர்ந்து அக்டோபர் 4ம் தேதி அசுரன் படம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிறகு இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் பட்டாஸ் திரைக்கு வருகின்றது.

மேலும், மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்புராஜ், ராட்சசன் ராம் படங்கள் என தனுஷின் லைன் அப் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் தான்.