Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சார் அடுத்தப்படம்! பேட்டியில் தல-60 குறித்து ஒரு விஷயத்தை கசியவிட்ட வினோத், ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்து பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத்தே, அஜித்தின் அடுத்தப்படத்தையும் இயக்கவுள்ளார்.

இவர் ஒரு பேட்டியில் கலந்துக்கொண்ட போது, போன் காலில் ரங்கராஜ் பாண்டே வந்தார், அப்போது ரங்கராஜ் பாண்டேவிடம் தொகுப்பாளர் அஜித் சாரிடம் நீங்கள் என் கேட்பீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘எல்லாரும் தான் அரசியலுக்கு அழைக்கிறார்களே, வாருங்கள்’ என்பேன் என கூற, உடனே வினோத் ‘சார் அடுத்தப்படம்’ என்று சொன்னார்.

உடனே பாண்டே சுதாரித்துக்கொண்டு அந்த பேச்சை மாற்றினார், இதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை தல 60 அரசியல் சம்மந்தப்பட்ட படமாக இருக்குமோ என்று பேச தொடங்கிவிட்டனர்.