Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு நெருக்கமான நடிகருக்கு அஜித்துடன் நடிக்க ஆசையாம்- தல வாய்ப்பு கொடுப்பாரா?

விஜய்யின் உறவினர் நடிகர் விக்ராந்த் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இவர் தனது சொந்த முயற்சியிலேயே படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

எப்படியாவது பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்று உழைக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். அண்மையில் இவர் நடித்துள்ள பக்ரீத் திரைப்படம் வெளியானது, ரசிகர்களிடமும் உண்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனால் சந்தோஷத்தில் இருக்கும் விக்ராந்திடம் டுவிட்டரில் ரசிகர் ஒருவர், அஜித் அவர்களுடன் நடிக்கலாமே, உங்களது பயணம் நன்றாக அமையும் என டுவிட் போட, அதைப்பார்க்க விக்ராந்த் எனக்கும் ஆசைதான் சகோ என பதில் கொடுத்துள்ளார்.

இதனை தல அஜித் கவனித்து வாய்ப்பு கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.