Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு தவறவிட்ட படங்கள் என்னென்ன தெரியுமா? பெரிய லிஸ்ட் போகிறது

சிம்பு தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளை சந்தித்த நடிகர். இவர் அளவிற்கு வேறு எந்த ஒரு நடிகரும் பிரச்சனைகளை சந்தித்து இருப்பார்களா? என்றால் கேள்விக்குறி தான்.

இந்நிலையில் சிம்பு சமீப காலமாக பல நல்ல படங்களை தவறவிட்டு வருகின்றார், சரி அவர் தவறவிட்ட படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்..

ஜீவா நடிப்பில் பிரமாண்ட ஹிட் அடித்த கோ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சிம்பு தான், அதே போல் ஆர்யா நடிப்பில் வெளியான வேட்டை படத்திலும் இவர் தான் முதலில் நடிக்கவிருந்தது.

இது மட்டுமின்றி தற்போது உருவாகி வரும் சங்கத்தமிழன், மாஃபியா ஆகிய படங்களிலும் முதலில் சிம்பு தான் நடிக்கவிருந்தார்.

மேலும், எடுப்பதாக கூறி நின்றது AC, வேட்டை மன்னன், கெட்டவன், வாலிபன், மன்மதன்2, தற்போது வெங்கட்பிரபுவின் மாநாடு வரை லிஸ்ட் நீண்டுக்கொண்டே போகின்றது.