Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் குறித்து திரிஷா அடித்த கமெண்ட்

அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. ஒரு மாஸ் ஹீரோ இப்படிபட்ட கதைக்களத்தில் நடித்துள்ளாரா என்பதே பலருக்கும் ஆச்சரியம் தான்.

வழக்கமாக அஜித் படங்களில் இருக்கும் எந்த விஷயமும் இப்படத்தில் இல்லை, கதைக்காகவே படத்தை மக்கள் வரவேற்றுள்ளனர். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை திரிஷாவிடம், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், நான் இன்னும் படம் பார்க்கவில்லை, ஆனால் படத்திற்கு நல்ல வரவேற்பு என்று கேள்விப்பட்டேன். அஜித் போன்ற ஒரு பெரிய நடிகர் இப்படிபட்ட கதைக்களத்தில் நடித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று சந்தோஷமாக பேசியுள்ளார்.