Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷங்கரையே மிஞ்சிய அட்லீ, இத்தனை கோடிகளை இழுத்துவிட்டாரா? அதிர்ந்த கோலிவுட்

அட்லீ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கத்தில் இந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் மீது லட்சக்கணக்கான ரசிகர்கள் செம்ம ஆவலுடன் இருக்கின்றனர், இதனால், படம் பெரிய வசூல் சாதனை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் அட்லீ இப்படத்தின் பட்ஜெட்டை பல கோடி அதிகரித்துவிட்டதாக இணையத்தில் சில பத்திரிகையாளர்கள் கூறிவருகின்றனர்.

இதில் குறிப்பாக அவுட்-டோர் யூனிட் பில் மட்டும் ரூ 25 கோடி வந்துள்ளதாகவும், இதுவரை வேறு எந்த படத்திற்கும் இப்படி ஒரு செலவு வந்தது இல்லை என கூறப்படுகின்றது, பலரும் செலவு செய்வதில் அட்லீ அவருடைய குருநாதர் ஷங்கரையே மிஞ்சிவிட்டார் என கூறி வருகின்றனர்.