Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மொத்த ரஜினிகாந்த் ரசிகர்களும் கொண்டாடும் ஒரு ஸ்பெஷல்! மறக்க முடியாத ஓர் சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவரின் படம் யாருடன் என்பது சர்ப்பிரைஸாக உள்ளது.

பல படங்களை ஹிட் கொடுத்து அசைக்க முடியாத உச்சத்தில் இருக்கும் அவருக்கு பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவரின் படங்களில் பல இன்றும் மறக்க முடியாத ஒன்று. தற்போது அவரின் ஊர்க்காவலன் படம் 32 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை எட்டியுள்ளது.

இதே செப்டம்பர் 4 , 1987 ல் இப்படம் வெளியானது. மனோ பாலா இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா நடிக்க சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்.