Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

27 வருடங்களுக்கு பிறகு யுகி சேது படம் இயக்குகிறாரா?- அதுவும் இந்த பிக்பாஸ் பிரபலம் தான் நாயகனா?

யூகி சேது என்றால் முதலில் நக்கல் நய்யாண்டி என்று தான் நியாபகம் வரும்.

இருப்பினும் அவர் தமிழில் முதல் படமாக கவிதைகள் பாட நேரம் இல்லை என்ற படத்தை இயக்கினார். அதை தொடர்ந்து மாதங்கள் ஏழு என்ற படம் இயக்கினார், இந்த இரண்டு படங்களும் சரியாக ஓடாத நிலையில் அவர் நடிப்பில் களம் இறங்கினார்.

இப்போது அவர் 27 வருடங்களுக்கு பிறகு ஒரு படம் இயக்கவுள்ளார், இதில் பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் இப்படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் லண்டன் சென்றதாகவும் கணேஷ் வெங்கட் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.