Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது 60வது படத்திற்காக வினோத்திடம் அஜித் கேட்ட ஒரு விஷயம்- நடக்குமா?

வினோத் இயக்கத்தில் இரண்டாவதாக அஜித் படம் நடிக்கிறார்.

படத்தின் சூட்டிங் தொடங்கியது, தொடங்கவில்லை என மாற்றி மாற்றி தகவல் வருகிறது. தற்போது படம் குறித்து ஒரு விஷயம்.

படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும், பைக் ரேஸ் உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற இருப்பதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.

இப்போது என்ன விஷயம் என்றால் அஜித்தின் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டுமே குடும்ப செட்டிமெண்ட் உள்ள படம்.

இதிலும் கொஞ்சம் குடும்பங்கள் பார்க்கும் சென்டிமெண்ட் இருந்தால் நன்றாக இருக்கும் என அஜித், வினோத்திடம் கேட்டிருக்கிறார் என்கின்றனர். வினோத் அஜித் கேட்டதை செய்வாரா இல்லை இந்த தகவலே வதந்தியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.