Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Breaking: பிகில் படத்தில் அப்பா விஜய்யின் பெயர் என்ன தெரியுமா? மிரட்டலான பெயர் ? என்ன தெரியுமா

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தை காண ரசிகர்கள் மிகவும் துடிப்போடு இருக்கிறார்கள். படமும் தீபாவளி திரை விருந்தாக வருகிறது. தியேட்டர் வட்டாரங்களும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டன.

விஜய் இப்படத்தில் அப்பா, மகன் என இரு வேடத்தில் நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே. இதில் மகன் விஜய்க்கு மைக்கேல் என பெயர் வைத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது அப்பா விஜய்க்கு ராயப்பன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்கெட் சம்மந்தப்பட்ட கதாபாத்திரத்தில் வரும் அவருக்கு இப்படியான பெயர் மிரட்டலாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.