Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளாவில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற சூர்யாவின் காப்பான், முதல் நாள் வசூல் விவரம்

சூர்யா நடிப்பில் காப்பான் படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

ஆனால், சூர்யா ரசிகர்களுக்கு இந்த படம் நீண்ட வருடங்களுக்கு பிறகு கொஞ்சம் பிடித்த படமாக தான் அமைந்துள்ளது.

அதிலும் கேரளாவில் மிக குறைந்த திரையரங்குகளில் தான் வெளிவந்தது, அப்படியிருந்தும் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்க, சுமார் ரூ 1.2 கோடி வரை இப்படம் முதல் நாள் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும், சூர்யாவின் என் ஜி கே அங்கு ரூ 46 லட்சம் தான் முதல் நாள் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.