Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டாம் நாள் இன்னும் அதிகரித்த காப்பான் தமிழக வசூல், சூர்யா மாஸ் கம்பேக்

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் காப்பான். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஆனால், நாளுக்கு நாள் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றது, அந்த வகையில் முதல் நாள் தமிழகத்தில் இப்படம் ரூ 7.5 கோடி வரை வசூல் செய்தது.

இரண்டாம் நாளான நேற்று ரூ 9 கோடி வரை இப்படம் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

கண்டிப்பாக சூர்யாவிற்கு இது டீசண்ட்-ஆன கம்பேக் படம் தான் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.

அதே நேரத்தில் காப்பான் தமிழ், கேரளா தாண்டி, பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தெலுங்கில் சறுக்கியது பலருக்கும் ஏமாற்றம் தான்.

தற்போது எல்லோரின் கவனமும் சூர்யாவின் அடுத்தப்படமான சூரரைப் போற்று தான்.