Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லாருடனும் சண்டை போடுகிறார் சூர்யா, காப்பான் படத்திற்கு செம்ம விமர்சனம் கூறிய 89 வயது பாட்டி, வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சூர்யா ஆகியோர். இதில் சூர்யா பல வருடமாக ஒரு ஹிட் கொடுப்பதற்காக போராடி வருகின்றார்.

ஆனால், அந்த கவலையை தற்போது காப்பான் போக்கியுள்ளது, ஆம், காப்பான் திரையிட்ட இடங்கள் அனைத்திலும் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடைப்போடுகின்றது.

தமிழகம் மற்றும் கேரளாவில் இப்படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது, இந்நிலையில் இப்படம் குறித்து ஒரு விமர்சனம் வந்துள்ளது.

அந்த வீடியோ தான் தற்போது செம்ம வைரல், அப்படி என்னவென்றால் 89வது பாட்டி ஒருவர் காப்பான் படத்திற்கு விமர்சனம் கூறுகின்றார்.

அதில் ‘சூர்யா எல்லோருடனும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றார், நல்ல ஜோரா நடிச்சுருக்காரு, எனக்கு ரொம்ப படம் புடிச்சுருக்கு’ என்று பேசியுள்ளார், நீங்களே பாருங்களேன்...