Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேண்டுமென்றே குறைக்கப்படுகிறதா காப்பான் வசூல், பின்னணியில் யார்?

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் காப்பான். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் உள்ளது.

முதல் நாள் இப்படத்திற்கு காலை, மதியம் காட்சி தமிழ்நாடு முழுவதும் கூட்டம் சுமாராக தான் இருந்தது. ஆனால், அதன் பிறகு பாசிட்டிவ் டாக் வர நல்ல கூட்டம் வாடா ஆரம்பித்தது.

அதை தொடர்ந்து இரண்டாவது நாள் சென்னை, திருச்சி, செங்கல்பட்டு, கோயமுத்தூர் ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய புக்கிங் ஆனது.

சொல்ல வேண்டுமென்றால் முதல் நாள் மொத்த வசூலை நேற்று மாலை காட்சிக்குள் காப்பான் வசூல் செய்துவிட்டது.

அப்படியிருக்க டுவிட்டரில் ஒரு சிலர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சொல்பவர்கள் வேண்டுமென்றே இப்படத்தின் வசூலை குறைத்து சொல்லி வருகின்றனர்.

இவை ஏன் என்று தெரியவில்லை, ஆனால், இவர்கள் அனைவருக்கும் ஒரு குறிப்பிடட நடிகர்கள் பேவரட் என்று இருப்பார்கள், அவர்கள் படங்களுக்கு எப்போதும் பல கோடிகளை அள்ளி வீசுவார்கள் என்பது வேறு கதை.

இதுவரை எந்த ஒரு திரையரங்கமும் படம் சரியாக போகவில்லை என்று கூறவில்லை, எல்லோரும் பழைய சூர்யா படம் போல் கூட்டம் வருவதாக கூறி வரும் நிலையில் இப்படி வசூல் குறைத்து சொல்பவர்கள் யார்? ஏன்? என்பது தான் பலரின் கேள்வியும்.