Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் படத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய வியாபாரிகள்- போஸ்டர்கள் கிழிப்பு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது பிகில். இதில் வரும் சத்தம் எந்த அளவிற்கு கேட்கப்போகிறது என்பதை தீபாவளி வரை பொறுத்திருந்து கேட்போம்.

கடந்த வாரம் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஒரு பிரபல கல்லூரியில் எல்லோரும் வாய் பிளந்து அசந்து பார்க்கும் அளவிற்கு தளபதியின் வெறியர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி நடந்தது.

இதில் விஜய் பேசியது குறித்து இப்போதும் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் படத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர் வியாபாரிகள்.

இப்பட ஃபஸ்ட் லுக் போஸ்டரில் இறைச்சி வெட்டும் முட்டுக்கட்டை மீது செருப்பு காலை விஜய் வைத்துள்ளதாகவும் இந்த போஸ்டர் தங்களது தொழிலை அவமதிக்கும் வகையில் இருப்பதாக இறைச்சி கடை உரிமையாளர்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதோடு விஜய்யின் போஸ்டர்களையும் கிழித்துள்ளனர்.