Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசுரனாக உருவாகியிருக்கும் தன்னுடைய கதை- மகிழ்ச்சியின் உச்சத்தில் எழுத்தாளர் பூமணி

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி என பலரும் நடித்து வெளிவந்த அசுரன் படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

எழுத்தாளர் பூமணி தமிழில் மூத்த எழுத்தாளர் ஆவார், சாகித்ய விருது எல்லாம் பெற்றுள்ளார். அவர் எழுதிய வெக்கை என்ற நாவல் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் அசுரன்.

ஓதுக்கப்பட்ட சாதியனர்களுக்கு எதிராக விவாதிக்கப்படும் இந்த நாவலை அருமையாக திரையில் துணிச்சலான வசனங்களுடன் காட்டி இருக்கிறார் வெற்றிமாறன்.

இந்த படத்தை பற்றி வெக்கை எழுத்தாளர் பூமணி, 'தமிழ் சினிமாவில் நாவல்களை தழுவி படம் ஆக்குவது ஆரோக்கியமானதாக பார்க்கிறேன்.

மேலும் எனது படைப்பை திரையில் பார்ப்பதற்கு மிகுந்த ஆவலுடன் இருந்தேன். வெக்கை நாவலில் சில திருத்தங்களைக் கொண்டு தான் அசுரன் படம் ஆக்கப்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் தமிழ் சினிமாவில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.