Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருடன் கைக்கோர்க்கும் அருண் விஜய், அடுத்தடுத்து அதிரடி

தமிழ் சினிமாவில் தன் கடுமையான உழைப்பால் இன்று உச்சத்தை தொட்டவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வந்த தடம் மெகா ஹிட் ஆனது.

தற்போது இவர் அக்னி சிறகுகள், மாஃபியா, பாக்ஸர் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார், விரைவில் இப்படங்கள் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இவர் அடுத்து பிரபல தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம்.

இவர் இதற்கு முன் ஜீவா நடித்த கொரில்லா படத்தை தயாரித்தவர், மேலும், த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடித்து வரும் ஒரு ஆக்‌ஷன் படத்தையும் தயாரித்து வருகின்றார்.

மேலும், இப்படத்தை ஹரிதாஸ், வாகா படத்தை இயக்கிய குமரவேலன் இயக்கவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.