Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நம்ம வீட்டு பிள்ளை பிரமாண்ட வசூல், சிவகார்த்திகேயன் 3வது முறையாக எட்டிய மைல்கல்

சிவகார்த்திகேயன் படத்திற்கும் படம் தன் மார்க்கெட்டை உயர்த்தியவர். ஆனால், இவரின் சமீபத்திய படங்களின் தோல்வி கொஞ்சம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் சறுக்கல் வந்தது.

ஆனால், உடனே சுதாரித்து மக்கள் விரும்பும் கிராமத்து குடும்ப படமான நம்ம வீட்டு பிள்ளையில் நடித்தார்.

அவர் எண்ணியது போலவே படமும் செம்ம வசூல் சாதனை செய்து வருகின்றது, தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 50 கோடி வசூலை எட்டிவிட்டதாம்.

இதன் மூலம் தமிழகத்தில் ரெமோ, வேலைக்காரனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மூன்றாவது ரூ 50 கோடி படமாக நம்ம வீட்டு பிள்ளை இடம்பிடித்துள்ளது.