Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல-60 படத்தில் இந்த காட்சிகள் அதிகம் இருக்கும், வெளிவந்த மாஸ் அப்டேட்

அஜித் நடிப்பில் இந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் என இரண்டு படங்கள் வந்துவிட்டது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அஜித் அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார், இப்படத்திற்காக அஜித் இளமை தோற்றத்திற்கு மாறவுள்ளாராம்.

சமீபத்திய புகைப்படங்கள் கூட அதை உறுதி செய்தது, தற்போது ஒரு பிரபல சினிமா பிரபலம் வினோத் தன்னிடம் சொன்னதாக ஒரு தகவலை கூறியுள்ளார்.

அதில் நேர்கொண்ட பார்வை படம் மிகவும் சீரியஸாக இருந்தது, அதனால், இந்த படம் அஜித் ரசிகர்களுக்கான படம்.

மேலும், இப்படத்தில் நிறைய காமெடி காட்சிகள் இருப்பதாக அவரே கூறியதாக தெரிவித்துள்ளார்.