Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

21 வருடம் கற்றுக்கொண்டதை 3 மணி நேரத்தில் விஜய் செய்த விஷயம்- பிகில் பட வெளிவராத தகவல்

விஜய்யின் பிகில் தான் அடுத்து தமிழ் சினிமாவில் வெளியாகப்போகும் ஒரு பெரிய படம். படத்தின் டீஸர் வரும் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் வெளியாக இருக்கிறது.

அந்த நாளுக்காக தளபதி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் படத்தில் புட் பால் போட்டியாளராக நடித்த குழுவினர் விஜய் பற்றி பேசியுள்ளனர்.

அதில் ஒருவர், நாங்கள் 21 வருடமாக கற்றுக்கொண்டதை அவர் 2-3 மணி நேர முயற்சியில் செய்து காட்டினார்.

படத்தில் ஒரு காட்சி உள்ளது. அதாவது Bicycle Kick என்று கூறுவார்கள், பந்தை மேலே போட்டு தலை கீழாக அடிக்கனும், அதை அவர் 5 முறை முயற்சியில் செய்து காட்டியது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று பேசியுள்ளார்.