Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளாவில் பிகிலுக்கு தொடரும் தலைவலி, இப்படியான விதிகளால் வசூல் வருமா?

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் பிகில் படம் முதல் நாள் பல படங்களின் வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது, அப்படியிருக்க விஜய்க்கு கேரளாவில் மிகப்பெரும் ரசிகர்கள் பலம் உள்ளது.

அவர்களும் பிகில் படத்தை வரவேற்க தயாராகி வருகின்றனர், ஆனால், கேரளா விஜய் ரசிகர்களுக்கு பெரும் தலைவலியாக ஒரு விஷயம் அமைந்துள்ளது.

அதாவது மாற்று மொழி படங்களுக்கு கேரளாவில் 125 திரையரங்குகள் தான் கொடுக்க வேண்டும் என சமீபத்தில் ஒரு சில விதிகளை கொண்டு வந்தனர்.

அப்படி ரிலிஸ் செய்தால், பிகில் படம் கண்டிப்பாக வாங்கிய விலையை எடுக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

அதனால் விநியோகஸ்தர்கள் பிகில் கேரளா ரைட்ஸை குறைத்து கொடுக்கும்படி பேசி வந்தனர். தற்போது இப்படத்தை மேஜிக் ப்ரேம்ஸ் கைப்பற்றியதாக தகவல் வருகின்றது.