Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆடியோ விழாவிற்கு விஜய்யை பார்க்க வந்த ரசிகர்கள் கூட்டத்தை கண்டு மிரண்டு போன பிரபல பாலிவுட் நடிகர்

விஜய்யின் பிகில் படம் பற்றிய பேச்சு தான் தமிழ் சினிமாவில் அதிகம். இப்படத்திற்கான புரொமோஷன் வேலைகள் பிஸியாக நடக்கிறது, இதற்கு நடுவில் படம் குறித்தும் சின்ன சின்ன அப்டேட் வந்து கொண்டு தான் இருக்கிறது.

பிகில் படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் ஜாக்கி ஷெராப் நடித்துள்ளார். ஒரு பேட்டியில் பிகில் பற்றி பேசும்போது, எஸ்.ஏ.சி அவர்களுடன் பணிபுரியும் போது சின்ன பையன் விஜய், அவர் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்ததை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வந்தேன், ஆனால் அவரை பார்க்க வந்த ரசிகர்கள் கூட்டத்தால் 3 மணி நேரம் டிராபிக்கில் மாட்டிக் கொண்டேன். அந்த அளவிற்கு அவர் தெரிதாக வளர்ந்திருப்பது பார்க்க சந்தோஷமாக இருக்கிறது என பேசியுள்ளார்.