Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயனின் ஆல் டைம் பெஸ்ட் வசூல், மாஸ் கம்பேக்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம் நம்ம வீட்டு பிள்ளை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக குடும்பத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் நம்ம வீட்டு பிள்ளை தமிழகத்தில் மட்டுமே ரூ 56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம், இதன் மூலம், இப்படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக அமைந்துள்ளது.

மேலும், இதற்கு அடுத்தடுத்த இடங்களில் வேலைக்காரன், ரெமோ ஆகிய படங்கள் உள்ளது, சிவகார்த்திகேயன் சீமராஜா, மிஸ்டர் லோக்கல் என்று தொடர் தோல்விப்படங்களை கொடுத்தார்.

ஆனால், நம்ம வீட்டு பிள்ளை வெற்றி அவரை மீண்டும் ஒரு நல்ல இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.