Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் ரன்னிங் டைம் இவ்வளவா? வெளிவந்த தகவல் இதோ

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படத்தின் பாடல்கள், ட்ரைலர் என அனைத்தும் செம்ம ஹிட் அடித்தது.

அதேபோல் படமும் மெகா ஹிட் அடிக்கும் என்றே அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர், இந்நிலையில் பிகில் படத்தின் சென்ஸார் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

அதோடு இப்படத்தின் ரன்னிங் டைம் 173 நிமிடம் என்று ஒரு செய்தி டுவிட்டரில் கசிந்துள்ளது, அதாவது 3 மணி நேரத்திற்கு வெறும் 7 நிமிடம் தான் குறைவாம்.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் இந்த செய்தி மிக வேகமாக டுவிட்டரில் பரவி வருகின்றது.