Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா? செம்ம அதிரடி ஆக்‌ஷன் கூட்டணி

சூர்யா தற்போது ஒரு மெகா ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். அவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த என்ஜிகே மற்றும் காப்பான் ஆகிய இரண்டு படங்களுமே எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் சூர்யா தற்போது சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்பு முடிந்து அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று பெரும் சந்தேகம் இருந்தது.

இயக்குனர் சிவா ரஜினி பக்கம் சென்றதால், அடுத்து பாலாவுடன் சூர்யா கூட்டணி அமைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது கிடைத்த தகவல்படி சூர்யா இயக்குனர் ஹரியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் இணையத்தில் கசிந்து வருகின்றது.