Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது குட்டி மகனால் மன வேதனையில் இருந்த பிக்பாஸ் புகழ் சித்தப்பு சரவணன்- சர்ப்ரைஸ் கொடுத்த டீம்

பிக்பாஸ் 3வது சீசனில் கொஞ்ச நாள் இருந்தாலும் மக்களின் பார்வைக்கு அதிகம் வந்தவர் சரவணன்.

இவர் ஏன் நிகழ்ச்சி விட்டு வெளியேற்றப்பட்டார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை, ஏன் அவருக்கு கூட தெரியாது எனலாம்.

நிகழ்ச்சி அவரை கைவிட்டாலும் திரைத்துறையில் அவருக்கு பிக்பாஸ் பிறகு நல்ல வாய்ப்பு வருகிறது. பாரதிராஜாவின் உதவியாளர் கிருஷ்ணா இயக்கி ஹீரேவாக நடிக்கும் படம் மருத. ராதிகாவும் சரவணனும் அக்கா-தங்கையாக நடிக்கும் இப்பட ஷுட்டிங் தேனியில் நடந்து வருகிறது.

சரவணன் தனது மகன் தீரஜ்ஜின் (அக்டோபர் 14) பிறந்தநாளை கொண்டாட முடியாதோ என வருந்தியுள்ளார்.

இதனை அரிந்த படக்குழு அவரது குடும்பத்தை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு நடிகை ராதிகா முன்னிலையில் அவரது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது.