Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கார்த்தி தன் அடுத்தப்படத்திற்காக எடுக்கும் கடும் பயிற்சி, அசுரத்தனமான உழைப்பு

கார்த்தி தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அதோடு மாஸ் படங்களில் நடித்து கமர்ஷியல் வெற்றியையும் கொடுப்பவர்.

இவர் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக கைதி படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

அப்படியிருக்க கைதி கண்டிப்பாக தமிழக பாக்ஸ் ஆபிஸில் ஒரு நல்ல இடத்தை பிடிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் கார்த்தி இதை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இப்படத்திற்காக கார்த்தி கடும் பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

ஒரு மாதம் இந்த படத்திற்காக மட்டும் பெரும் பயிற்சி எடுக்க, கார்த்தியின் திரைப்பயணத்தில் இவை மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.