சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து மெகா ஹிட் அடித்துள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை. இப்படம் வசூலில் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தக்கட்டமாக அமைந்துள்ளது.
ஏனெனில் இதுவரை தமிழகத்தில் சிவகார்த்திகேயன் படங்களில் நம்ம வீட்டு பிள்ளை தான் அதிக வசூல் என்று கூறப்படுகின்றது.
ஆம், இதுவரை சுமார் இப்படம் ரூ 60 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாம், மேலும், பிகில் வரை வேறு எந்த புதிய படங்களும் வரவில்லை.
அதனால், நம்ம வீட்டு பிள்ளை ரூ 75 கோடி வரை தமிழகத்தில் வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
நேர்கொண்ட பார்வை தமிழகத்தில் மட்டும் ரூ 73 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது, இதை நம்ம வீட்டு பிள்ளை முறியடிக்குமா பார்ப்போம்.